ETV Bharat / state

கொள்ளை முயற்சி - வெட்டு வாங்கிய பெண் - woman stabbed

சென்னை: பூவிருந்தவல்லியில் பெண்ணை தாக்கி வழிப்பறி செய்ததாக நிருபர் அடையாள அட்டை வைத்திருந்த நபர் பொதுமக்களால் தாக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வெட்டு வாங்கிய பெண்
author img

By

Published : Jul 28, 2019, 3:27 PM IST

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி(65). இவரது மனைவி தனலட்சுமி. நேற்றிரவு கடைக்கு சென்ற தனலட்சுமி வீடு திரும்பிகொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கத்தியைக் காட்டி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க நகையை பறித்து தப்பி ஓட முயன்றார்.

அவரிடமிருந்து தப்பிக்க தனலட்சுமி போராடியபோது, அப்போது கொள்ளையன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டினார். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் கொள்ளையனை மடக்கி பிடித்து பூவிருந்தவல்லி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கைபற்றப்பட்ட ஐடி கார்டு
கைபற்றப்பட்ட ஐடி கார்டு

பிடிப்பட்ட நபரிடம் இருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டை,கத்தி, மிளகாய் பொடி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர் ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது.

Intro:சென்னை பூந்தமலியில் பெண்ணை தாக்கி வழிப்பறி செய்ததாக நிருபர் அடையாள அட்டை வைத்திருந்த நபர் பொதுமக்களால் தாக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைப்பு
Body:சென்னை பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் மூர்த்தி/65.இவரது மனைவி தனலட்சுமி சின்னத்திரை தொடர்களில் உதவியாளராக(கூலி) உள்ளார்.தனலட்சுமி நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் கத்தியைகாட்டி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றார்.அப்போது தனலட்சுமி அவரிடம் போராடியுள்ளார்.அப்போது கொள்ளையன் கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.இதனால் தனலட்சுமிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் கொள்ளையனிடம் தொடர்ந்து போராடியுள்ளார்.இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.அப்போது இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. Conclusion: இதனை அடுத்து அங்கிருந்த மக்கள் கொள்ளையனை அடித்து உதைத்தனர்.பின்னர் பூவிருந்தவல்லி காவல்துறையினருக்கு தகவல் அளித்து பிடிப்பட்ட நபரை ஒப்படைத்தனர்.பிடிப்பட்ட நபரிடம் இருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டை,
கத்தி ,மிளகாய் பொடி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். காவல்துறை விசாரணையில் பிடிப்பட்ட நபர் அயப்பந்தாங்களை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கொள்ளையனை பிடித்த இளைஞர்கள் கூறுகையில் செந்தூர்பபுரத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.இதனால் அனைத்து பகுதியில் மின் விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.என கோரிக்கை வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.