சென்னை: பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒருவர் கஞ்சா புகைத்துகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக மதுவிலக்கு போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர், சென்னை அமைந்தகரைப் பகுதியை சேர்ந்த ஷானு என்ற பெண் தனக்கு கஞ்சா விற்பனை செய்ததாக தெரிவித்தார். அதன்பின் போலீசார் அங்கு விரைந்து திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷானு(34) என்ற பெண்ணை கைது செய்து, அவர் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:மாமனாருக்கு மருமகன் போட்ட சதிதிட்டம்... விஷம் கலந்த மதுவால் மரணம்..