சென்னை: நந்தம்பாக்கம், பத்மினி கார்டன் பகுதியில் வீடு வீடாகச் சென்று கரோனா களப்பணியாற்றிவந்தார் தரணி (27). அப்பொது 158ஆவது மாநகராட்சி வார்டில் கரோனா களப்பணியில் ஈடுபட்டபோது மரக்கிளை ஒன்று அவர் மீது உடைந்து விழுந்துள்ளது.
இதில் முதுகு உள்ளிட்ட இடங்களில் காயமேற்பட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 15 நாள்களாகச் மருத்துவம் பெற்றுவந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இது குறித்து நந்தம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து மரக்கிளை விழுந்த மரம் முழுமையாக அகற்றப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆளுநர் உரையில் இடம்பெற்ற ஸ்டாலினின் கனவுத் திட்டம்!