ETV Bharat / state

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் சிறையில் அடைப்பு! - Woman arrested for stealing train in Chennai

சென்னை: ஓடும் ரயிலில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Woman arrested for stealing train in Chennai, சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த பெண் சிறையில் அடைப்பு
author img

By

Published : Nov 8, 2019, 5:58 PM IST

சென்னையில் பெண்கள் வெயிலின் தாக்கம், மாசுக்கள் காரணமாக முகத்தில் துணிக்கட்டி கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ரயில்கள், பேருந்துகளில் பல இளம் பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துவந்தது. எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் ஒரே மாதிரியாக ஒன்பது திருட்டு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு இளம்பெண் முகத்தில் துணி கட்டிக்கொண்டு மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் சாதாரண பயணி போல் ஏறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த அதே பெண் இன்று பூங்கா ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி தேவி (24) என்பதும், இவர் இதேபோன்று பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தேவியிடம் இருந்து சுமார் 20 சவரன் நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுமி கைது!

Intro:Body:ஓடும் ரயிலில் முகத்தில் துணியை கட்டி கொண்டு தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இளம்பெண் கைது*

சென்னையில் பொதுவாக பெண்கள் வெயிலின் தாக்கம் மற்றும் மாசுக்கள் காரணமாக முகத்தில் துணிக்கட்டி கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.இந்நிலையில் இதனை பயன்படுத்தி இரயில்கள் மற்றும் பேருந்துகளில் பல இளம் பெண்கள் திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருவது அதிகரித்து வந்தது.இதனை தொடர்ந்து எழும்பூர் ரயில் காவல் நிலையத்தில் மட்டும் ஒரே மாதிரியாக சுமார் 9திருட்டு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.அப்போது ஒரு இளம்பெண் முகத்தில் துணி கட்டிகொண்டு மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் சாதாரண பயணி போல் ஏறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுப்படும் எழும்பூர்,பூங்கா, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.

பின்னர், சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த அதே பெண் போல் முகத்தில் துணி கட்டி கொண்டு இன்று பூங்கா ரயில் நிலையத்தில் ஒரு பெண் செல்லும் போது காவலர் ஒருவர் தனிப்படை போலீசார் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திய போது அவள் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி தேவி (24) என்பதும், இவள் இதே போன்று பல குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் கடந்த ஒரு மாதங்களில் செங்கல்பட்டு முதல் கடற்கரை வரை செல்லும் ரயிலில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் தேவி ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தேவியை கைது செய்த போலீசார் அவளிடம் இருந்து சுமார் 20 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து அவளை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.