சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி அனுஷா. இவர்கள் இருவரும் சேர்ந்து எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இவர்கள், 2013ஆம் ஆண்டு சென்னை பழவந்தாங்கலில் வீடு கட்டித் தருவதாக கூறி நங்கநல்லூரைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரிடம் 65 லட்சம் ரூபாய் பெற்றனர்.
காவல் துறை விசாரணை
சொல்லியபடி வீட்டை கட்டித் தராமல் மோசடி செய்ததுடன், கொடுத்த பணத்தை கேட்ட முத்துகுமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்துகுமார் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொணடனர்.
பணம் மோசடி - கைது
விசாரணையில், பணம் மோசடி செய்தது உறுதியானதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் கடந்த 2019ஆம் ஆண்டு எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த சிவக்குமாரின் மனைவி அனுஷாவை காவல் துறையினர் நேற்று (ஜூலை 19) கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ. 49.50 லட்சம் மோசடி - அரசுப்பள்ளி தலைமையாசிரியர் கைது