நடிகர் விஷால் பற்றி ஆபாசமான அவதூறான கருத்துக்களை யூடியூப் மூலம் பரப்பி பிரபலமானவர் விஸ்வ தர்ஷினி.
ஏற்கனவே நடிகை காயத்ரி சாய் என்பவரின் மகள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக எழுதியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட காலம் தலைமறைவாக இருந்த விசுவ தர்ஷினியை கடந்த 2019ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் வைத்து சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது விசாரணை நிலுவையில் உள்ள அந்த வழக்கை வாபஸ் வாங்க காயத்ரி சாயை பல சந்தர்ப்பங்களில் மிரட்டி வந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தன்னிடமிருந்து சில வீடியோக்களை திருடி தடைசெய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் தனது வீடியோக்களை பதிவிறக்கி வருவதாகவும் சமீபத்தில் காயத்ரி சாய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விஸ்வ தர்ஷினி மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விஸ்வதர்ஷினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.