ETV Bharat / state

அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு - AIADMKs sluggishness is the reason for Corona's rise

கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Jun 24, 2021, 1:46 PM IST

Updated : Jun 24, 2021, 1:54 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் உரை வழங்கினார்.

'எங்கள் மீது நம்பிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி'

அப்போது பேசிய அவர், 'திமுக ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருக்கும்.
தேர்தல் அறிக்கையில் திமுக 505 வாக்குறுதிகள் அளித்தோம். ஆட்சி பொறுப்பேற்று 49 நாட்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என எங்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.

தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை இலவசம்
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ், 75 ஆயிரத்து 546 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை இலவசம் என்ற அறிவிப்பால் 20 ஆயிரத்து 500 பேர் பயனடைந்துள்ளனர்.

'இல்லை என்பதை இல்லாமல் செய்திருக்கிறோம்'
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது கரோனா படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை. தற்போது இல்லை, இல்லை எற்கிற சொல்லை இல்லாமல் செய்திருக்கிறோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தனது பதவி முடிந்தது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதன்பின் அவர் எந்த அரசுப்பணியும் பார்க்கவில்லையா..?

'அதிமுகவின் மெத்தனப்போக்கே கரோனா உயர்வுக்குக் காரணம்'
மார்ச் 6ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது. மார்ச் மாதம் இறுதியில் இருந்து கரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. அதிமுக அரசின் மெத்தனப்போக்கால் தான் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
'திமுக அடக்க முடியாத யானை'

'திமுக அடக்க முடியாத யானை'

அடக்கப்பட்ட யானைக்குத் தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு 4 கால்கள் தான் பலம், அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம் என தெரிவித்தார்.

முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்

- கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மையங்கள்(Post Covid Clinic)அமைக்கப்படும்.

- வளர்ச்சியில் பின்தங்கி உள்ள வடமாவட்டங்களான செய்யாறு, திண்டிவனத்தில் 22ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

- கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
ஸ்டாலின்

- பழைய சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

- தமிழ்நாட்டில் முதன்மையான 100 திருக்கோயில்கள், பழமை மாறாமல் புனரமைக்கவும், கோயில் குளங்கள் மற்றும் திருத்தேர்கள் சீரமைப்பு செய்யவும், திருவிழாக்கள் நடத்தவும். இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

- கடந்த அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசு திரும்பப் பெறும்

- என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் என்னை மேலும் உழைக்க உந்துகின்றன. 'தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்

Last Updated : Jun 24, 2021, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.