ETV Bharat / state

ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அதிமுகவினர் ஏற்றுக்கொள்வீர்களா? - பிடிஆர் கேள்வி! - ஓபிஎஸ் குறித்து பேசிய பிடிஆர்

சட்டப்பேரவையில், அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அதிமுகவினர் ஏற்றுக்கொள்வீர்களா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 19, 2023, 10:40 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் இன்றைய பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செயல்திட்டம் தீட்டியதை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என அதிமுக உறுப்பினர் செந்தில்குமார் பேசினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளில் ஒரு ஆண்டாவது 1 ரூபாய் வருவாயில் சேமித்ததாக காண்பிக்கட்டும். ஆதாரமற்ற முறையில் பேசக்கூடாது. தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை அளித்துள்ளேன்'' என்றார்.

மேலும் பேசிய அவர், '' 2006ஆம் ஆண்டு திமுக பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 5ஆயிரம் கோடி இருந்த முதலீட்டை, 2011ஆம் ஆண்டு ஆட்சி முடியும்பொழுது 13 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த 10ஆண்டுகளில் 1 விழுக்காடு கூட முதலீட்டை உயர்த்தவில்லை.

2003 முதல் 2016 வரை இருந்த திமுக, அதிமுக ஆட்சியில் உற்பத்தி முதலீடு சிறப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அதிமுகவினர் ஏற்றுக்கொள்வீர்களா?” என விளக்கமளித்து நிதியமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி, “முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தான் செயல்பட்டனர். நீங்களும் முதலமைச்சரின் வழிகாட்டுதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் சலுகை என்னும் தீர்மானம் அரசியல் காரணங்களுடையது - வானதி சீனிவாசன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.