ETV Bharat / state

ஈஷாவால் யானைகள் வழித்தடம் அடைப்பு; யானைகள் ஊருக்குள் வருகிறது என மனு!

author img

By

Published : Nov 23, 2022, 10:13 PM IST

ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈஷாவால் யானைகள் வழித்தடம் அடைக்கப்பட்டு ஊருக்குள் வருகிறது என ஆர்வலர் மனு

சென்னை: விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்குத்தொடரக்கூடாது என விளக்கம்கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீஸுக்குத் தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதில், சென்னையைச் சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ’ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடமாகும். தற்போது யானைகளின் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் யானைகள் ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும், 'கடந்த 10 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. யானைகள் தாக்கியதில் சுமார் 160க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர். இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் டிஸ்கோ நடனம் நடத்தி, சினிமா நடிகர்கள் சிவராத்திரி இரவுகளில் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிக டெசிபல் ஒலியால் அப்பகுதியில் மாசுபடுவதாகவும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுகிறது. எனவே, ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களை எதிர்மனுதாரராக சேர்க்க கோரிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட எக்ஸோபிளானெட்... ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.