ETV Bharat / state

கணவரால் ஏமாந்த பெண்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தனது வீடியோவை இணையதளத்தில் விடுவதாக மிரட்டி கணவன் பணம் பறிப்பதாகவும், தான் இருக்கும் போதே சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Lady complaint  wife gave complaint on husband  wife gave complaint on husband in chennai  chennai news  chennai latest news  crime news  குற்றச் செய்திகள்  சென்னை செய்திகள்  கணவன் மீது புகார்  கணவன் மீது புகார் அளித்த மனைவி  சென்னையில் கணவன் மீது புகார் அளித்த மனைவி  வரதட்சணை கொடுமை  தகாத உரவு  கள்ளக்காதல் விவகாரம்  illicit lover  husband and wife fight  கணவரால் ஏமாந்த பெண்
கணவரால் ஏமாந்த பெண்
author img

By

Published : Jul 28, 2021, 2:01 PM IST

திருவள்ளூர்: திருமழிசையைச் சேர்ந்த திவ்யா, அவரது உறவினர் முத்து என்பவரை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது 200 சவரன் நகை, வரதட்சணையாக பணம் முத்துவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் திவ்யாவுக்கு சொந்தமான எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

திருமணம் நடந்து ஒரு சில நாள்களில் முத்து பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே திவ்யாவிடம், உனது தாயிடமிருந்து பணம் பெற்று வரக்கூறி அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

மேலும் முத்து தனது அண்ணன் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டதாக அதற்கு பணம் தரவேண்டும் என திவ்யாவின் நகையை அடகு வைக்க வேண்டும் எனக்கூறி பலமுறை சண்டையிட்டு வந்துள்ளார்.

Lady complaint  wife gave complaint on husband  wife gave complaint on husband in chennai  chennai news  chennai latest news  crime news  குற்றச் செய்திகள்  சென்னை செய்திகள்  கணவன் மீது புகார்  கணவன் மீது புகார் அளித்த மனைவி  சென்னையில் கணவன் மீது புகார் அளித்த மனைவி  வரதட்சணை கொடுமை  தகாத உரவு  கள்ளக்காதல் விவகாரம்  illicit lover  husband and wife fight  கணவரால் ஏமாந்த பெண்
வரதட்சணை பொருள்கள்

இதனைத் தொடர்ந்து, தான் சொந்தமாக தொழில் தொடங்குவதாக கூறி, திவ்யாவிடம் நகைகளை வாங்கி அடகு வைத்து, புதுப்பேட்டையில் ராக் டிரேடர்ஸ் என்ற வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடையை திவ்யா பெயரிலேயே தொடங்கியுள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாம் குழந்தை கருவுற்ற போது, ஏஞ்சல் என்ற பெண்ணை முத்து வீட்டுக்கு வேலைக்காக அழைத்து வந்து, அவருடன் திருமணத்தை மீறிய உறவை வைத்துள்ளார். இதனை பல முறை திவ்யா கண்டித்தும் அவர் செவி சாய்க்கவில்லை.

மேலும் முதல் திருமணம் ஆகி இருந்த நிலையில் எவ்வித விவாகரத்தும் மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக ஏஞ்சலை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்து திருமணம் செய்துள்ளார்.

சொத்தையும், நகைகளையும் அபகரித்த முத்துவும், அவர்து அண்ணன், தாய், சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் ஏஞ்சல் ஆகியோர் இணைந்து கூலிப்படை உதவியுடன் பலமுறை திவ்யாவை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

புகார்

இதனால் இவர்கள் நான்கு பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்களது புகைப்படங்கள், ஆடியோக்கள் அடங்கிய புகார் மனுவினை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முத்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள ஏஞ்சல், விஜய் மக்கள் இயக்கத்தில் மத்திய சென்னை மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்து வருவதாகவும், அதிமுக கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒருவரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் முத்து தனக்கே தெரியாமல், தன்னை தவறாக வீடியோ எடுத்துள்ளதாகவும், அதனை இணையதளத்தில் விடுவதாக மிரட்டி பணம் கேட்டு வருவதாகவும், பணமும் நகையும் கொடுக்கவில்லை என்றால் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.