சென்னை: கொளத்தூர் பகுதியை சேர்ந்த லதா(51), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், தனது கணவர் மருத்துவர் ராஜ்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றுவதாகவும், குடும்பப் பிரச்னை ஏற்பட்டு தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற மகள்
இதையடுத்து தனது மகன் மீது பொய் புகார் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாகவும், குடும்பத்தினரோடு சேர்ந்து, தனது மகளையும் கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் தனது மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு மாதங்களாக தன்னை கொடுமை படுத்திய கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அப்புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் மருத்துவர் ராஜ்குமார், தந்தை நடராஜன், தாய் சம்பூரணம், சகோதரிகள் தேன்மொழி, பூங்கோதை ஆகிய 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலுக்கு இடையூறு... கணவரை கொன்று எரித்த மனைவி