சென்னை: விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் சர்தாஜ் பேகம். இவரது கணவர் வேலூர் இப்ராஹிம், பாஜக சிறுபான்மை அணியின் மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் விசிகவை சேர்ந்த சர்தாஜ் பேகம், நேற்று (அக்.26) தனது கணவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார். அவரது கருத்துகள் ஜாதி மோதலை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளன.
இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், திருமாவளவனை தகாத வார்த்தைகளால் இப்ராஹிம் பேசி வருகிறார். அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை கைது செய்ததைப் போல், இப்ராஹிமையும் கைது செய்ய வேண்டும். முத்தலாக் கூறிவிட்டு சென்ற எனது கணவர் வேலூர் இப்ராஹிம் மீது புகார் அளித்தும் இது வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
இதையும் படிங்க: பாமக பிரமுகர் கொலை வழக்கு - தேடப்பட்டுவந்த நான்கு குற்றவாளிகள் கைது