சென்னை வானிலை ஆய்வு மையம் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், இரவு ஒரு மணி முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியப் பகுதிகளில் நேற்று (ஜன. 04) இரவு முதல் மழை பெய்து வருகிறது. தாம்பரம், முடிச்சூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது பணிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை!