ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக கரோனா நிவாரண நிதி ஒதுக்கவில்லை

சென்னை: கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்காதது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Why should not allot more relief fund for TN, HC ask questions

author img

By

Published : Apr 8, 2020, 3:00 PM IST

ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குநர் ராஜேந்தர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கும்போது 510 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது போதுமானதாக இருக்காது என தெரிவித்தனர். மேலும் கரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டிற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்ததுடன் நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும், கரோனா பாதிப்புள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும், முன்வர தவறினால் அவர்களைக் கட்டாயப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அவர்களின் நிறுவனங்களின் தகவலை பெற்று உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.