ETV Bharat / state

அனைத்து கோயில் அறங்காவலர்களின் விவரங்களையும் ஏன் வெளியிடக்கூடாது? - இந்து சமய அறநிலையத்துறை

சென்னை : ”தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களின் பெயர்களையும் ஏன் வெளியிட கூடாது?” என இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Why not disclose temple trustees under HR&CE, MHC queries

author img

By

Published : Sep 3, 2020, 6:34 PM IST

”இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர்களின் பெயர்கள், தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோயில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா?அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா? என்பன குறித்த விவரங்களை அந்ததந்தப் பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிடவேண்டும்.

மேலும் அவற்றை கோயில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என நெல்லை மாவட்டம், ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயில் அறங்காவலர் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? நிர்வாகிகள் குறித்த விவரங்களை கோயில் அறிவிப்புப் பலகையில் ஏன் வெளியிடக் கூடாது?” என தமிழ்நாடு அரசுக்கு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.

இதற்கு அரசு தரப்பில் விரிவான பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.