ETV Bharat / state

காவடி தூக்கவா டெல்லி போகிறேன்...ஸ்டாலின்

காவடி தூக்கவா டெல்லி போகிறேன் என்றும், கை கட்டி வாய் பொத்தி, உத்தரவு என்ன என்று கேட்கவா,டெல்லி போகிறேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bhaகாவடி தூக்கவா நான் டெல்லி போகிறேன்rat
Etv Bharaகாவடி தூக்கவா நான் டெல்லி போகிறேன்t
author img

By

Published : Aug 17, 2022, 7:02 AM IST

Updated : Aug 17, 2022, 7:10 AM IST

சென்னை : கலைவாணர் அரங்கத்தில் நேற்று (16.8.2022) நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் . திருமாவளவனின் மணிவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, அவருக்கு பொன்னாடை அணிவித்து, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 95 வயது வரை வாழ்ந்த பெரியாரும், கருணாநிதியும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தார்கள். திருமாவும் அது போல் வாழ வேண்டும்.

என்றும் ஆதரவு ; திருமா, கல்லூரிக்காலங்களில் திமுகவின் உள்ளிருந்தும், தற்போது கூட்டணியில் இருந்தும் தோள் கொடுக்கிறார். எப்போதும் வெளியே சென்றதில்லை அவர் என்றார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று நான் மேடைக்காக சொல்லவில்லை, நம்முடையது கொள்கைக் கூட்டணி, நம்மை யாரும் பிரிக்க முடியாது.

தமிழர்களும், நாகர்களும் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று சொன்னவர் அம்பேத்கர்.
திராவிட மாடல் கொள்கை என்ன என்று அவர் பேட்டியை 2 நாட்களுக்கு முன் பார்த்தேன். ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம் தான் என்று தெரிவித்திருந்தார். ஈவெரா பெயரை, கருணாநிதியை விட அதிகம் சொல்வது ஸ்டாலின் தான் என்று இணையத்தில் எழுதிய முகம்தெரியாத சகோதரருக்கு நன்றி.

கொள்கை ஒன்று தான் : பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திராவிட கருத்தை நிறைவேற்றத் தான் இந்த ஆட்சி என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகிறேன். கோட்டையில் இருந்தாலும் , அறிவாலயத்தில் இருந்தாலும் கொள்கை ஒன்று தான்.

காவடி தூக்கவா நான் டெல்லி போகிறேன் ஸ்டாலின்

காவடி தூக்கவா நான் டெல்லி போகிறேன் ? கை கட்டி வாய் பொத்தி, உத்தரவு என்ன என்று கேட்கவா, நான் போகிறேன், கருணாநிதியின் பிள்ளை நான்.
உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பவன் நான்.

உறவு - விளக்கம் : தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசிடம் பேசி தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களைப் பெற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறது தவிர திமுகவுக்கும் பாஜகவும் இல்லை.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது. திருமா நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சகோதரன் ஸ்டாலின் சொல்கிறேன். பாஜகவோடு துளி சமரசமும் செய்யமாட்டான் இந்த ஸ்டாலின் என தெரிவித்தார்.

அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகலாம் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்வது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்ற பேரவையில் தீர்மானம் போட்டது இப்படி அடுக்கி கொண்டே போகலாம். திமுக அடிப்படைக் கொள்கையில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை, இவைதான் சாட்சி.

பிறந்தநாள் பரிசு : இதனால்தான் சனாதானவாதிகளால் வகுப்புவாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது, சனாதன சக்தியை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்ற முழக்கத்தினை நானும் வழிமொழிகிறேன். சங்ககால தமிழகத்திற்கு எதிரானதுதான் சனாதன சக்தியின் சங்கத்துவம், அதனை ஒன்றிணைந்து வீழ்த்துவோம், இதுதான் திருமா உங்களுக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு என தெரிவித்தார். கருணாநிதி சொல்லி திருமா செய்யாதது திருமண மட்டும்தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமா திருமணம் செய்து கொண்டார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி . வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்களான சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Aug 17, 2022, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.