ETV Bharat / state

நிரப்பப்படாத கல்லூரி பேராசிரியர் பணியிடம் - அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு - Madras High court

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatநிரப்பபடாத கல்லூரி ஆசிரியர் பணியிடம் - அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

author img

By

Published : Nov 3, 2022, 6:44 PM IST

சென்னை பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த வி.செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்குத்தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10ஆயிரம் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கடந்த 12 ஆண்டுகளாக இந்தப்பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 1020 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேலைப்பளு அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பள்ளி கல்வித்துறை சார்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு இணை இயக்குநர் அந்தஸ்தில் உயர் கல்வித்துறை சார்பில் உறுப்பினர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக உயர் கல்வித்துறை சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி உதவிப்பேராசிரியர் பணியிடங்கள், ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாத காரணத்தினால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அரசு கலைக்கல்லூரிகளில், உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக என்ன நிலை என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க;'தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை..!' - உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.