ETV Bharat / state

Annamalai Vs TRB Rajaa யாருக்கு கடிதம் எழுதுவது?... டிவிட்டரில் மோதும் அண்ணாமலை, டி.ஆர்.பி ராஜா

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இடையே டிவிட்டரில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

Amul
அமுல்
author img

By

Published : Jun 1, 2023, 7:07 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் மாநிலங்களுக்குள் பால் உற்பத்தி பகுதியை மீறாமல் தங்களது கூட்டுறவு சங்கங்கள் செழிக்க பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில், அமுல் நிறுவனம் எல்லை தாண்டி கொள்முதல் செய்வதாக தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அமுல் நிறுவனத்தின் இந்த செயல்பாடு, கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்படும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கூட்டுறவு சங்கங்கள் இடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் எனவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பது சரி தானா என்பது விவாதப் பொருளாகி உள்ளது. பால் பொருட்கள் சார்ந்த துறை அமித்ஷாவின் கீழ் வரவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலையின் பேச்சை தமிழ்நாடு பாஜக பகிர்ந்துள்ளது. அதில் "அமித்ஷாவின் 9 ஆண்டு கால மத்திய அமைச்சர் பதவி வரலாற்றில் ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்" என கிண்டலாக கூறியிருந்தார்.

  • திரு அமித் ஷா அவர்களின் 9 ஆண்டு கால வரலாற்றில் ஸ்டாலின் அவர்கள் எழுதியதைப் போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்

    - மாநில தலைவர் திரு.@annamalai_k #influencersMeet #Annamalai pic.twitter.com/ZDhC85egPr

    — BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு பதிலடியாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "பாஜகவின் தமிழ்நாடு பிரிவு தன்னிடம் உள்ள 20,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை விட இன்னும் அதிகம் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்களின் துறைகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அமுல் என்பது ஒரு கூட்டுறவு சங்கம்.

எனவே அது கூட்டுறவுத்துறையை கவனிக்கும், அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தமிழ்நாடு பாஜகவுக்கு அதன் சொந்த அரசு குறித்த அறிவு பூஜ்ஜியமாகவே உள்ளது. தங்கள் கட்சியின் தலைவர்களை அவமதிப்பதை எப்போது நிறுத்தப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

  • Looks like the TN unit of the BJP needs to read much more than the 20000+ books that it already says it has : ) The Constitution would be a good start but let them atleast read the List of Ministries in the Union Cabinet ! #Amul is a cooperative and the Union Minister for… pic.twitter.com/5QV9whz6jB

    — Dr. T R B Rajaa (@TRBRajaa) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனாலும், பால் வளத்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா நிர்வகிக்கும் துறைகளின் கீழ் வரவில்லை என, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "தனது தந்தையின் வழிநடத்தலில் செயல்படும் நபருக்கு, மத்திய அமைச்சரவை பற்றிய தெளிவான புரிதல் தேவைப்படுகிறது. அமுல் மற்றும் நந்தினி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) தீர்த்து வருகிறது. அந்த வாரியம் மத்திய அரசின் மீன் வளம் மற்றும் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை கூட அறியாமல் தாங்கள் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது" என கூறியுள்ளார்.

  • A man who runs on his father’s legacy & the chairman of DMK dimwits will need some schooling on the functions of various Ministries in the Central government.

    It is National Dairy Development Board (NDDB) that is resolving the cross-border marketing issues between Amul &… https://t.co/keq50iSQea

    — K.Annamalai (@annamalai_k) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் துறைகள் தொடர்பாக அண்ணாமலைக்கும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் இடையே டிவிட்டரில் ஏற்பட்டுள்ள சண்டை இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

  • And what is that 9 year history !
    Thiru Sha has been minister for the past 4yrs ! Something seriously off with these guys... those who are laughing at such false statements need to wake up. https://t.co/YGLrSR0Wq8

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.