ETV Bharat / state

‘முருகன், நளினியை உறவினர்களுடன் பேச வைக்க தமிழ்நாடு அரசிற்கு அதிகாரம் இல்லை’

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் ஆகியோரைப் பேச அனுமதியளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Who’s have the power to Permit Nalini and murugan interact with abroad relation, MHC Queries

author img

By

Published : Jul 15, 2020, 4:39 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள அவரின் தாயுடனும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி, முருகனை வெளிநாடுகளிலுள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் நடராஜன், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலைச் சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடிதத்தில் அனுமதிதான் கேட்டுள்ளீர்கள், ஏன் பரிந்துரை செய்யவில்லை என கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர் தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரை செய்வதற்கான அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசுக்குத்தான் அது உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு இதுகுறித்து உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.