ETV Bharat / state

சுதந்திர தின உரிமை நாயகனின் வரலாற்றுப் பக்கம்

நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று தலைநகரங்களில் கொடியேற்றுவதற்கான உரிமையைப் பெற்றுத்தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த சிறப்புத்தொகுப்பு.

சுதந்திர தின உரிமை நாயகனின் வரலாற்றுப் பக்கம்
சுதந்திர தின உரிமை நாயகனின் வரலாற்றுப் பக்கம்
author img

By

Published : Aug 13, 2022, 3:15 PM IST

Updated : Aug 13, 2022, 7:11 PM IST

சென்னை: நாடு முழுவதும் வரும் திங்களன்று 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாட்டின் பிரதமரும், குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவர் மட்டுமே கொடியேற்றி வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றுவதும், குடியரசுத் தினத்தன்று மாநில ஆளுநர் தேசிய கொடியேற்றுவதும் வழக்கமாக இருந்துவருகிறது. இந்த வழக்கம் 1974 ஆம் ஆண்டுக்கு முன் கிடையாது. அதாவது மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றினர்.

மறுக்கப்பட்ட உரிமை அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தன்றும் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தார்கள். இதற்கு மற்ற மாநில முதலமைச்சர்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அப்படி இருக்கவில்லை. 1969ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாநில முதலமைச்சர்களுக்கு தலைநகரங்களில் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று கருணாநிதி வெளிப்படையாக பேசினார்.

1969ஆம் ஆண்டு முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட கருணாநிதி, "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற தத்துவத்தை மாநிலம் முழுவதும் முழங்கி வந்தார். இந்த முழுக்கம் டெல்லி வரை சென்றது. இதனையேற்றுக்கொண்ட மத்திய அரசு, ”மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்றும் ஆளுநர்கள் குடியரசு தினத்தன்றும்" கொடியேற்றலாம் என்று சட்டம் கொண்டுவந்தது.

அந்த வகையில், 1974ஆம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் கொடியேற்றிவருகின்றனர். இந்த உரிமைக்காக குரல் கொடுத்த கருணாநிதிக்கு அப்போதைய முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

கருணாநிதியின் மேல் எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், ஆளும் மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு காரணம் கருணாநிதி என்பதை மறுக்க முடியாது. சொல்லப்போனால் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த வேளையில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றியதும் கருணாநிதியின் குரல் மூலம் கிடைக்கப்பெற்றதே என்கிறனர் திமுகவினர்.

இதையும் படிங்க: கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வூட்டிய சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

Last Updated : Aug 13, 2022, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.