ETV Bharat / state

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கி ஊழியர் காயம்!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

வெள்ளைப் புலி
வெள்ளைப் புலி
author img

By

Published : May 3, 2022, 2:26 PM IST

சென்னை: சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவைகள், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள ‘நகுலன்’ என்ற வெள்ளைப் புலி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சரிவர உணவு சாப்பிடாமலும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக வெள்ளைப் புலி கூண்டில் அடைக்கப்பட்டது.

பராமரிப்பாளர் செல்லையா மற்றும் ஊழியர்கள் பூங்கா மருத்துவர்கள் முன்னிலையில், புலியின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் இன்று (மே 3) ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளைப் புலி பாய்ந்து பராமரிப்பாளர் செல்லையாவை தாக்கியது. இதில் புலியின் நகங்கள் பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்லையா வீடு திரும்பினார்.

இது குறித்து பூங்கா நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், "வெள்ளைப் புலிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூண்டில் அடைக்கப்பட்டு, மாதிரிகளை சேகரிக்கும் பணியில் பராமரிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளைப் புலி செல்லையாவைத் தாக்கியது. செல்லையாவின் கண் பகுதியின் கீழ் வெள்ளைப் புலி காலால் தாக்கியுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்லையா சிகிச்சை பெற்து தற்போது நலமுடன் உள்ளார்" என்றார்.

இச்சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வெள்ளைப் புலியின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் செயற்கை மழை - கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.