ETV Bharat / state

மன அழுத்தம் காரணமாக சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை - software engineer commit suicide - SOFTWARE ENGINEER COMMIT SUICIDE

சென்னையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் நேற்று அதிகாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட சாப்ட்வேர் இன்ஜினியர், கோப்புப்படம்
தற்கொலை செய்து கொண்ட சாப்ட்வேர் இன்ஜினியர், கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 10:19 PM IST

சென்னை : தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(50). இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் சென்னை வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கார்த்திகேயன் தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது மனைவி பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து கார்த்திகேயனும் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் இரவு கார்த்திகேயன் மட்டும் தனியாக தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த இவரது மனைவி கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்காததால், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கார்த்திகேயன் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. திடுக்கிட வைத்த கொலையாளியின் வாக்குமூலம்!

இது குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கார்த்திகேயன் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் "எனக்கு பலர் செய்வினை வைத்துள்ளதாகவும், அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதி இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலையை கைவிடுக
தற்கொலையை கைவிடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், கார்த்திகேயன் இறப்பதற்கு முன்னர் அவரது சகோதரருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், எனது மறைவுக்குப் பிறகு எனது குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவும் அவர்களை கைவிட்டு விட வேண்டாம் என மெசேஜ் அனுப்பி உள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தான் உயிரிழந்து இருக்கிறார் என தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமபவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.