ETV Bharat / state

கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு - Madras high court permits new peacock idol at Kapaleeswarar temple

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத்துறைக்கு உத்தரவு
அறநிலையத்துறைக்கு உத்தரவு
author img

By

Published : Apr 6, 2022, 12:51 PM IST

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது.

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத்துறை அலுவலர்களின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (ஏப்ரல் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மயில் அலகில் மலர் தான் இருந்தது என்பது தெரியவந்ததாகவும், சிலை மாயமானதற்கு காரணமான அலுவலர்களை அடையாளம் காண உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு விசாரணையை முடிக்க ஆறு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மயில் சிலை மாயமானது குறித்து காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், தொல்லியல் துறையிடம் இருந்து சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதிய மயில் சிலை தயாரிக்க அறிவுரை: மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளதாகவும், சிலையை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், இந்த வழக்கில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள், உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். காவல்துறை விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மயிலின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இடைப்பட்ட காலத்தில், அலகில் மலருடன் கூடிய மயில் சிலையை தயாரிக்கும் பணியை தொடங்கும்படி, அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாயமான மயில் சிலையை கண்டறிய குழு அமைத்து அரசாணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.