ETV Bharat / state

”மதுவை விட மோசமான அழிவுகளை ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும்” - ராமதாஸ் எச்சரிக்கை - ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பரப்புரை

சென்னை : மதுவால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு சீரழியுமோ, அதைவிட மோசமான சீரழிவுகளை, மதுவைக் காட்டிலும்  குறைவான காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Continuing Sacrifices: When will the online gambling atrocities end? questioned pmk founder Ramadoss

author img

By

Published : Oct 20, 2020, 2:18 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் வாழ்க்கையைக் கூட தொடங்காத அவனது குடும்பம் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம், கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 35 வயது இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில், கடன் வாங்கியும், தமது சொத்துகளை அடகு வைத்தும், வங்கி சேமிப்புகளைக் கரைத்தும் 30 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். அனைத்தையும் இழந்த நிலையில், வாழ்வதற்கு வழி தெரியாத சூழலில் மனைவியையும், கைக்குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு, நேற்று முன்தினம் (அக்.18) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தனது தற்கொலைக்கான காரணம் குறித்து மனைவிக்கு அனுப்பிய ஒலிச்செய்தியில், தனது தற்கொலையையே சாட்சியாக்கி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும்படி பரப்புரை செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் என மாநில எல்லைகளைக் கடந்து ஆன்லைன் சூதாட்டங்களும், அதில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தடுக்க வேண்டிய அரசுகள் வேடிக்கைப் பார்க்கின்றன.

மதுவால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு சீரழியுமோ, அதை விட மோசமான சீரழிவுகளை, அதைவிட குறைவான காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும்.

மகாபாரதம் என்பது புராணக்கதையாக இருந்தாலும்கூட, அதில் சித்தரிக்கப்பட்ட சூதாட்டத்தின் தீமைகள் உண்மை. மகாபாரதத்தில் சகுனி எவ்வாறு காய்களை உருட்டி தருமரை வீழ்த்தினாரோ, அதேபோல் தான் இன்று ஆன்லைன் சூதாட்டத்தில் கணிணி ரோபோக்கள் செய்யும் செப்படி வித்தைகளால் அப்பாவிகள் வீழ்த்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம் என்பது புதைமணலை விட மோசமானது. அதிலிருந்து மீண்டு வர முடியாது. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பரிசுச்சீட்டு என்ற மோகினிப் பிசாசின் ஆட்டம் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை பரிசுச் சீட்டுகளில் இழந்தனர். அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன.

ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்படவில்லை என்றால், அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். இதனை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்து சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை, தடையும் செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதனைத் தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.