தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று கரோனா ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார். அந்தவகையில், இன்று (செப். 09) விழுப்புரம் வந்திருந்த அவர், ரூ.955 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தல் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசின் உயர் அலுவலர்கள் உடன் கரோனா குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து வரும் காலங்களில் முடிவு செய்யப்படும். தகுதி அடிப்படையில் விழுப்புரம் மாநகராட்சியாக அறிவிக்கப்படும். நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பெற்றோரின் மனநிலையை அறிந்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு!