ETV Bharat / state

'மக்களை காப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்துக்கு மாநில அரசு தடை விதித்ததை தவறு என்று கூற முடியாது!' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக தீங்காக உள்ள ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

High court
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Apr 27, 2023, 4:24 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து, 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, விதிகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்த சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது. இந்த சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ’’மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது. திறமைக்கான விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது. ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல; திறமை விளையாட்டு. ஒட்டு மொத்தமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது.

மத்திய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு அதே பிரச்னை தொடர்பாக சட்டம் இயற்ற முடியாது. தற்போது, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட, ட்ரீம் 11 விளையாட்டு உள்ளது. நாடு முழுவதும் விளையாடப்படும் அதை எப்படி தடை செய்ய முடியும்? சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும்" என்ற வாதத்தை முன்வைத்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”சூதாட்டம் குறித்த இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தான் அதிகாரமில்லை. மாநில சட்டம், தடை மட்டும் விதிக்க முடியுமே தவிர, இணையதளத்தில் இருந்து நீக்க முடியாது. அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். திறமையை விட அதிர்ஷ்டம் மேலோங்கி இருக்கும் விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தளங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிக்கின்றன. அப்பாவி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது" எனக் குறிப்பிட்டார்.

மற்றொரு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "மக்களின் பணத்தை பறிக்க ஆன்லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. தற்போதைய நிலையில் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். பங்குச்சந்தை இழப்பால் ஏற்படும் மரணங்களை காரணம் காட்டி, தடை விதிக்க முடியுமா? இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பல லட்சம் ரூபாய் புழங்கும் நிறுவனங்களை மூட வேண்டி இருக்கும்" எனக் கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், "சமூக தீங்காக உள்ள ஆன்லைன் விளையாட்டுக்களால் மரணங்கள் நிகழ்வதாலும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாலும், அவற்றை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது? மக்கள் நலன் தான் மிக முக்கியம். இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு ஜூன் இரண்டாவது வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அரசுத்தரப்பில் பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும். வழக்கு ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மோதலைத் தூண்டியதாகப் புகார்: நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.