ETV Bharat / state

நீட் மசோதா: அரசியல் சாசனம் (பிரிவு 200) என்ன சொல்கிறது?

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தில் உள்ள செயல்முறைகளை கீழே விரிவாகக் காண்போம்.

நீட் மசோதா: அரசியல் சாசனம் (பிரிவு 200) என்ன சொல்கிறது?
நீட் மசோதா: அரசியல் சாசனம் (பிரிவு 200) என்ன சொல்கிறது?
author img

By

Published : Feb 4, 2022, 7:55 AM IST

ஒரு சட்ட முன்வடிவு, ஒரு மாநில சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றப்பட்டதன் மேல் அல்லது சட்டப்பேரவை மேலவை உள்ள ஒரு மாநிலத்தில் அந்த மாநிலச் சட்டமன்ற ஈரவைகளினாலும் நிறைவேற்றப்பட்டதன் மேல், அது ஆளுநரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்.

மேலும் ஆளுநர், தாம் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ அச்சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஓர்வுக்காக நிறுத்திவைப்பதாகவோ விளம்புவோர்.

வரம்புரையாக

ஆளுநர் தம்மிடம் ஏற்பிசைவுக்காக ஒரு சட்டமுன்வடிவு முன்னிடப்பட்ட பின்பு, இயன்றளவு விரைவில், அது ஒரு பணச்சட்ட முன்வடிவமாக இல்லாதிருப்பின், அச்சட்ட முன்வடிவையோ அதில் குறித்துரைக்கப்பட்ட வகையங்கள் எவற்றையுமோ அந்த அவை அல்லது அவைகள் மறு ஆய்வு செய்யுமாறும், குறிப்பாக, தாம் பரிந்துரைக்கும் திருத்தங்கள் எவற்றையும் அறிமுகப்படுத்துவது விரும்ப தகுந்ததா என்பதைப் பற்றி கருதுமாறும் கேட்டுக்கொள்கின்ற செய்தியுறையுடன் அச்சட்ட முன்வடிவை அந்த அவைக்கு அல்லது அவைகளுக்கு திருப்பி அனுப்பலாம்.

அவ்வாறு ஒரு அச்சட்ட முன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்போது, அந்த அவை அல்லது அவைகள் அதன்படியே அச்சட்ட முன்வடிவை மறுஆய்வு செய்தல் வேண்டும்.

மேலும் அந்த அவையினால் அல்லது அவைகளினால் அச்சட்ட முன்வடிவு திருத்தத்துடனோ, திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு ஏற்பிசைவளிக்க மறுத்தல் ஆகாது.

மேலும் வரம்புரையாக

சட்டமுன்வடிவு எதுவும் சட்டமாகிவிட்டால் உயர் நீதிமன்றத்திற்கு அமைந்திருக்க வேண்டும் என்று இந்த அரசமைப்பில் வரைந்தமைக்கப்பட்ட தகுநிலைக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அந்த நீதிமன்றத்தின் அதிகாரங்களை அது திறக்குறைவு செய்யும் என ஆளுநர் கருதுவராயின், அச்சட்ட முன்வடிவு எதற்கும் ஆளுநர் ஏற்பிசைவு அளித்தல் ஆகாது. அதனை குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக நிறுத்திவைத்தல் வேண்டும்.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் நம்மிடம் கூறுகையில், "மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அதிகாரம் இருக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்த மசோதா கொண்டுவந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்துசெய்ய முடியும்.

ஏனெனில் நீட் தேர்வு என்பது இந்திய மருத்துவக் குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு கொண்டுவந்தது. அதனால் மாநில அரசுக்கு இந்தத் தேர்வை ரத்துசெய்யும் அதிகாரம் இல்லை. மேலும் மீண்டும் நீட் சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பார்.

குடியரசுத்தலைவர் மத்திய அரசிடம் கருத்து கேட்ட பின்பே அவர் ஒப்புதல் வழங்க முடியும்" எனத் தெரிவித்த அவர் இது ஒரு நீண்ட செயல்முறை எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆங்கில கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.