ETV Bharat / state

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்(Rafale watch) சிறப்பம்சங்கள் என்ன? - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் வாட்ச் பில் தொடர்பான திமுக - பாஜக தலைவர்கள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த ரஃபேல் வாட்ச் குறித்த சிம்பம்சங்களை பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Dec 20, 2022, 7:50 PM IST

ஹைதராபாத்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்திற்கு 36 ரஃபேல்(Rafael) போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. டசால்ட் நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சுவிஸ்சர்லாந்தை சேர்ந்த பிரபல வாட்ச் நிறுவனமான பெல் & ரோஸ்(bell & ross) என்ற நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு பல்கான் போர் விமானத்தின் நினைவாக விண்டேஜ் ஸ்போர்ட்ஸ் ஹெரிட்டேஜ் என்ற மாடல் வாட்சை வெளியிட்டது.

பின்னர் 2015-ம் ஆண்டு BR-03-94 என்ற மாடல் வாட்ச் ஒன்றை Bell & Ross தயாரித்து வெளியிட்டது. ரஃபேல் விமானத்தைப் போன்று அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் என்றும் வெறும் 500 வாட்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரஃபேல் விமானத்தின் அனைத்து அம்சங்களும் உங்களது கைகளில் உள்ளது என்பதை விளக்குவது தான் இந்த கடிகாரத்தின் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புமிக்க வாட்சுகளை உலகளவில் பல முக்கிய நபர்கள் அப்போதே முன்பதிவு செய்து வாங்கிவிட்டார்கள். அதன் விலையானது ரூ.3.5 லட்சம் தொடங்கி ரூ.5.5 லட்சம் வரை நாடுகளின் வரிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் வாட்ச் சிறப்பம்சங்கள் என்ன?

  • வாட்ச் கேஸ் பகுதி மேட் பிளாக்(Matt black) மிரேக் கேஸிங் செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தெர்மல் கன்ட்ரோல் மூலமாக அனைத்து வானிலையும் தாங்கும் தன்மை கொண்டது.
  • வாட்ச் டயல் பகுதியில் ரஃபேல் விமானத்தில் மாதிரி புகைப்படம், ரஃபேல் என்ற பெயர் இடம்பெற்றிருக்கும்.
  • ஆட்டோமெடிக் மெஷின் பொருத்தப்பட்ட ஸ்ட்ராப் உயர்தர ரப்பரால் ஆனது.
  • கிலோ மீட்டர் வேகத்தைக் கணக்கெடுக்கும் டாக்கி மீட்டர் ஸ்கேல் உள்ளது.
  • வாட்டர் ரெசிஸ்டெண்ட் லெவல் 100 மீட்டரை கொண்டது.

இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட ரஃபேல் வாட்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எப்போது வாங்கினார்? பில்(bill) எங்கே என அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: Tawang Sector: தவாங்கை குறிவைக்கும் சீனா.. அருணாச்சல் எல்லையில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.