ETV Bharat / state

தீபாவளி பண்டிகை.. பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடும் விதமாக பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 17 அம்ச வழிகாட்டுதல்களை தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை
author img

By

Published : Oct 19, 2022, 5:29 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் 17 அம்ச வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க, அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். அதேபோல பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என 2 மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89 இன் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.

அதேபோல எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிகக் கூடாது. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக் கூடாது. குடிசைகள், ஓலைக் கூரைகள் உள்ள இடங்களில் வான வெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக் கூடாது.

பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தியை உபயோகித்து ஆபத்துக்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

கூடுதலாக விதிமுறைகளை மீறியோ அல்லது பட்டாசுக்கடை உரிமமின்றியோ பட்டாசு விற்பனை செய்தாலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டும், ஒலி அளவை தாண்டியும் பட்டாசுகளை வெடித்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற பேருந்து நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் தகுந்த குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

பட்டாசு பொருள்களை பேருந்து, இருசக்கர வாகனம், ரயில் போன்றவற்றில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பண்டிகை நாளில் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்த்து, விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டுபிடித்து, கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறையையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையையும் அவசர உதவி எண்ணான 100 மற்றும் 112-ஐ அழைக்க வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 இல் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

வழிகாட்டுதல்களை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; எடப்பாடி மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.