ETV Bharat / state

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - weater update

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

weather-news-update
author img

By

Published : Apr 22, 2019, 8:04 PM IST

Updated : Apr 22, 2019, 9:49 PM IST

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் 2 செ.மீ மழையும், உதகையில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

 தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது மிகவும் மோசமான வெயில் அடிக்க வந்த நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு  என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் (இலங்கைக்கு தென் கிழக்கு திசையில்) வரும் 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான 48 மணி நேரத்தில் வலுப்பெற்று வலி மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதே போல் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் 2செ.மீ மழையும் 
உதகையில் 1செ.மீ மழை பதிவாகி உள்ளது...

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் (இலங்கைக்கு தென் கிழக்கு திசையில்) வரும் 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்,
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதால்
மழைக்கான சாத்திய கூறுகள் உள்ளதாகவும், அதன் நகர்வை வைத்தே முழுமையாக கூற முடியும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது ....

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்,
அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் ....

 இவ்வாறு வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Apr 22, 2019, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.