சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராஜபாளையத்தில் (விருதுநகர்) 8செ.மீ மழையும், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), உத்தமபாளையம் (தேனி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) பகுதிகளில் தலா 4செ.மீ மழையும், வீரபாண்டி (தேனி), கோவிலான்குளம் (விருதுநகர்), பிளவக்கல் (விருதுநகர்), மேல் பவானி (நீலகிரி) ஆகிய பகுதிகளில தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரியார் சிலை மீது வன்முறை வெறியாட்டம் - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு