சென்னை: பூவிருந்தவல்லி அடுத்த குமணன்சாவடி சனா மாடல் பள்ளியில் செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடம் நடத்தும் 3வது மாநில அளவிலான சிலம்பப்போட்டி இன்று(ஆக.28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மேடையில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மெய்யநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுபேற்று உடனேயே தமிழ் கலாசாரம் பாரம்பரியமிக்க சிலம்ப கலைக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதன் அடிப்படையில் சிலம்ப பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அரசானையை அறிவித்தார்.
சிலம்பக் கலையை மேம்படுத்தும் விதமாக உலக நாடுகளில் சிலம்பத்தை கற்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். சிலம்பக் கலை தோன்றிய காலத்தை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவை விட திமுக ஆபத்தானது... சீமான் விமர்சனம்