ETV Bharat / health

வெறும் வயிற்றில் சீரக தண்ணீரும் அதன் 7 பயன்களும் இதோ..! - HEALTH BENEFITS OF JEERA WATER

தினசரி சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தாண்டி, வெறும் வயிற்றில் சீரகம் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? பலன்கள் என்ன? என்பதை தெரிந்து பயன்பெறுங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 6, 2024, 4:33 PM IST

பொதுவாக, சமையலில் ருசிக்காவும், மனத்திற்காகவும் பயன்படுத்தப்படும் சீரகம், தமிழர்களின் பாரம்பரியத்தில் இன்றியமையாததாக இருக்கிறது. இப்படிப்பட்ட சீரகத்தை, தினசரி காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் காய்ச்சி குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

  • செரிமானம் சீராகும்: நீண்ட நாட்களாகச் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீரகத் தண்ணீரைக் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும். அதுமட்டுமல்லாமல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவையும் எளிதில் குணமாகும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.
  • நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்: அடிக்கடி தொற்று நோயால் அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீரை குடித்து வருவதால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்பெறும். இதனால், நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • இரத்த அழுத்தம் சீராகும்: அதிக இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால், அதிலுள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து, வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடித்து வர இரத்த அழுத்தம் சீராகும்.
  • ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்: இரத்த சோகை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடித்து வர, இதிலுள்ள இரும்புச்சத்து உடலில் புதிய இரத்த செற்களை உற்பத்தி செய்து நாள்பட்ட இரத்த சோகையை குணமாக்குகிறது.
  • மாதவிடாய் வலி நீங்கும்: மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. மாதவிடாயின் போது, காய்ச்சி வடிகட்டிய சீரக தண்ணீரைக் குடித்து வர வலி நீங்க செய்கிறது.
  • புத்துணர்ச்சி கொடுக்கும்: சீரகத்தில், பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளதால், காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
  • முடி வளரும்: சீரகம், அகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. முடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த தண்ணீரைத் தினசரி காலையில் குடித்து வரும் போது, சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு, முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

சீரகத் தண்ணீரை எப்படி தயாரிப்பது : இரண்டு கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு நிறம் மாறி ஒரு கிளாஸ் அளவிற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை, தினசரி காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக அல்லது ஆற வைத்தும் குடிக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.