சென்னை : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ, சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்) : அதிகபட்ச வெப்பநிலை : கரூர் பரமத்தி 34.5 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை : ஈரோடு : 18.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நவ 6 -12 : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 6, 2024
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : வட மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்? - வானிலை தன்னார்வலர் கூறுவது என்ன?
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் :
நவ 7 -8 : வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் : எச்சரிக்கை ஏதுமில்லை.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்