சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நாங்கள் தமிழை பற்றியும், தமிழர்களை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். சுப்பிரமணிய சுவாமியின் கருத்து தேவையற்றது அவரைப் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் அதனை இப்போது பேசவில்லை என தெரிவித்தார்.
பொன் ராதாகிருஷ்ணன் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள், கொண்டாட தெரியாதவர்கள் என்று கூறிய கருத்துக்கு அவர் மொழி மாறி விட்டார் என நினைக்கிறேன் என்றார்.
பொருளாதாரம் கீழ்நோக்கி பாய்ந்து கொண்டு இருக்கிறது. அதனை மக்கள் மறப்பதற்கு இது போன்ற பிரச்னைகளை முன் வைக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாடு என்றுமே மொழியை போற்றுவதற்கும், தேவைப்பட்டால் அதுக்காக போராடுவதற்கும் தயாராக இருக்கிறது. நாங்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் இதுதான் மொழி என்று ஒரு மொழியை திணித்தால் அதனை ஏற்றுகொள்ள மாட்டோம். இந்தி போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பள்ளி மாணவன் நான் என கூறினார்.