சென்னை: மயிலாப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் கமலஹாசனின் 68 வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன்,"என்னுடைய வயதுக்கு நான் கருதுவது மக்கள் நீதி மய்யத்திற்கு என்ன வயதோ அது தான் என் வயது. அதேபோல் உங்களது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் எப்படி இருக்கும் வேண்டும் என்பதற்கு எனக்கு நூறு வருஷம் நல்லா இருங்க என்பதெல்லாம் போதாது. ஆயிரம் வருடம் வேண்டுமென வாழ்த்த வேண்டும்.
அரசியல் சிலருக்கு அடையாளம், சிலருக்கு கௌரவம், சிலருக்கு அரசியல் தொழில், பலருக்கு பிழைப்பதற்கான வழி என்பதும் எனக்கு என்று நான் சொல்லும் போது என்னை தனிமைப்படுத்தாதீர்கள், உங்கள் இதயத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
அதேபோல் இன்று எனது 68வது பிறந்தநாளில் 68 கழிப்பறைகள் பள்ளிக்கூடத்தில் கட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் அவர்கள் 90 கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து உள்ளார்கள். அதனால் எனது வயது இன்றைக்கு 90 வது வயதாக கருதுகிறேன். சினிமாவில் என்னை கேட்கிறார்கள் என்ன அடுத்தடுத்து சினிமா படம் குறித்து அறிவிப்பு வருகிறது என சினிமா என் தொழில், அரசியல் என் கடமை. சினிமா சாப்பாடு அரசியல் மூச்சு" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நம் கூட்டத்தில் சாதி குறித்து பேசுவதை, சாதியை தூக்கி பிடிப்பதை நிறுத்த வேண்டும் அதுமட்டுமில்லாமல். பல சடங்கை தவிர்த்து விட்டோம், இந்த சடங்கையும் தவிர்த்து விடுவோம் என்றார். மேடையில் கமல் பேசிக் கொண்டிருக்கும்போதே தொண்டர் ஒருவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்களின் கூச்சலுக்கு நான் ஆழ்வார்பேட்டையை ஆள வரவில்லை உங்கள் மனதை ஆள வந்தேன் என்றார்.
காலில் விழுவது கட்சியின் அடையாளம் அல்ல, யார் காலிலும் விழாதீர்கள், முக்கியமா என் காலில் விழாதீர்கள். எனக்கும் வாழ்த்து சொல்லும் போது, தமிழுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்க வேண்டும்.
உங்களை என்னால் திருத்த முடியும், ஆளுநரையோ, மத்திய அரசையோ திருத்த வேண்டும் என்றால், அதற்கு நாளாகும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பிறந்தநாளை ஒரே நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது" - கமல்ஹாசன்