சென்னை: நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதில் காவலர்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்களப் பணியாளர்களாக மக்களைக் காக்க நிற்பது காவலர்கள்தான்.
இவர்களில் பலர் மக்களைக் காக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் முற்பட்டபோது உயிர் நீத்துள்ளனர். அவ்வாறு உயிர் நீத்தவர்களைக் கொண்டாடும் வகையில் இன்று (அக். 21) காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் காவல் துறையில் வீரமரணமடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காவல் துறையில் வீரமரணமடைந்தவர்களுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் இன்று #PoliceCommemorationDay அனுசரிக்கப்படுகிறது.
நமது பாதுகாப்புக்காக, அமைதியை நிலைநாட்டிட, குறிப்பாக கரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர்நீத்த தியாக சீலர்களான காவல் துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.