இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "கரோனாவுக்கு எதிராக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் நமது நினைவில் தியாகிகளாக முன் நிற்கின்றனர். மனித வாழ்வை பாதுகாப்பதை கடமையாகக் கொண்டு செயல்படும் அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது. மனித குலத்துக்கு உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவி செய்வார்.
சுதந்திரத்துக்குப் பின், நம் குடிமக்களின் வாழ்க்கை தரம் வளர்ந்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டினாலும் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் சமூக பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான பணிகள் நமது பலத்தால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு நமது விடாமுயற்சியும் தான் காரணம். எனவே, மனித குலத்தை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியார்களுக்கு தோளோடு தோள் கொடுப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 38 பேருக்கு கரோனா; எண்ணிக்கை 1242ஆக உயர்வு!