ETV Bharat / state

இந்தாண்டு போதைப்பொருள் வழக்குகள் 50% அதிகரிப்பு - சங்கர் ஜிவால் - Chennai Police Commissioner

கடந்த ஆண்டை விட இந்தாண்டு 50 விழுக்காடு அதிகப்படியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டை விட இந்தாண்டு 50% அதிகப்படியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளோம்

author img

By

Published : Jun 26, 2022, 2:00 PM IST

சென்னை: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மெரினா கடற்பரப்பில் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள போதை விழிப்புணர்வு குறித்த மணற்சிற்பத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (ஜூன் 25) திறந்து வைத்தார். பின்னர் போதைக்கு எதிரான மாணவர்களின் நாடகத்தை கண்டுகளித்தார்.

இதனையடுத்து போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல் துறை சார்பில் நடத்திய ஓவிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சைக்கிளை பரிசாக வழங்கினார். மேலும் போதை பொருளுக்கு எதிரான ராட்சத பலூனை பறக்க விட்டார்.

இந்தாண்டு போதைப்பொருள் வழக்குகள் 50% அதிகரிப்பு - காவல் ஆணையர்

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்ததாக 168 கடைகள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளோம். வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ள உள்ளோம்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு 50 விழுக்காடு அதிகபடியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போதை பொருட்களை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருவதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும், போதை பொருளுக்கு எதிராக 42 ஆயிரம் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.