ETV Bharat / state

கரோனா தொற்றை கட்டுப்படுத்த வழிமுறைகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - கரோனா வழிமுறைகள் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

கரோனா தொற்று அதிகளவில் பரவுவதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று கட்டுப்படுத்த வழிமுறைகள்
கரோனா தொற்று கட்டுப்படுத்த வழிமுறைகள்
author img

By

Published : Jul 3, 2021, 7:46 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் தற்போது தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 02) அறிவித்துள்ளது.

அதில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ( Test - Track - Treat vaccination- Covid = 19 Appropriate Behaviour ) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் பின்பற்ற வேண்டியவை:

கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர , இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

கரோனா தொற்று பரவலை கண்காணிக்க , குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது , தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்:

மேலும், “கரோனா தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கரோனா தொற்றினை முற்றிலும் அழிக்க உதவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.