ETV Bharat / state

'இனி தண்ணீர் லாரி வந்தவுடன் ஓட வேண்டியதில்லை' -  குடிநீர் வாரியத்தின் முயற்சிக்கு சென்னைவாசிகள் வரவேற்பு! - கரோனா ஊரடங்கு

சென்னை மாநகரில் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் இந்த முயற்சிக்கு சென்னைவாசிகள் மிகுந்த வரவேற்பளித்துள்ளனர்.

chennai-metro-water-special-story
chennai-metro-water-special-story
author img

By

Published : Jun 19, 2020, 5:08 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக விலகலை பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்திவருகிறது.

மக்கள் தகுந்த இடைவெளியுடன் தண்ணீரைப் பெறுவதற்கு சென்னை குடிநீர் வாரியம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதாவது குடிநீர் விநியோகிக்கும்போது மக்கள் அதிகம் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அதனைத் தவிர்க்கும் விதமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் தொட்டிகளை அமைத்து, அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் புது ஐடியா!

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மாநகரப் பகுதிகளில் லாரிகள் மூலம் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 650 லாரிகள் மூலம் 5,695 ட்ரிப்கள் என குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. அப்படி குடிநீர் வழங்கப்படும்போது மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அதிகப்படியான மக்கள் ஒன்றுகூடும் நிலை ஏற்படும் என்பதால், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் தற்போது 6,183 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தினமும் தண்ணீர் நிரப்பட்டு அதிலிருந்து தகுந்த இடைவெளியுடன் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ராமசாமி கூறுகையில், "கரோனா பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தண்ணீர் லாரிகள் வந்தவுடன் பொதுமக்கள் தண்ணீரைத் தாங்கள் முதலில் பிடித்தால், அடுத்த வேலையைக் கவனிக்கலாம் என்னும் அவசரத்தில் லாரிகள் முன்பு கூட்டம்கூடிவிடுகின்றனர்.

அதனைத் தவிர்ப்பதும் கடினமான வேலை. அதனால்தான் இந்தத் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்போது லாரிகள் வந்தாலும் அதில் தண்ணீரை யாராலும் பிடிக்க முடியாது. அந்தத் தண்ணீர் நேரடியாக அவர்களின் பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டுவிடும். அதனால் மக்கள் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட்டு தகுந்த இடைவெளியும் பின்பற்றப்படும் இந்தத் திட்டதினால் அனைவருக்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், தண்ணீர் எளிதில் செல்லாத பகுதிகளுக்கும் சுலபமாக தண்ணீரைக் கொண்டு சேர்த்துவிட முடியும்" என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "இப்போது எங்களுக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை. லாரி வந்தவுடன் ஓடவும் வேண்டியது இல்லை. எங்களுக்குத் தேவையான தண்ணீரைக் கூட்டம் சேராமல் வரிசையில் நின்று பிடித்துக்கொள்ளவும் முடிகிறது" என்கின்றனர்.

இதையும் படிங்க: 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தில் மும்முரம் காட்டும் சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.