ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பில்லை - அமைச்சர் துரைமுருகன் - Lake

24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரி கண்காணிக்கப்படுவதால் கூடுதல் நீர் வரத்து அல்லது நீர் வெளியேற்றம் பொது மக்களை பாதிக்காது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
author img

By

Published : Nov 13, 2022, 6:18 PM IST

சென்னை: வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. மாலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 3ஆயிரத்து 675 கன அடியாக உள்ளது.

ஏரியின் முழுக் கொள்ளளவான 24 அடியில், 20. 73 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. தொடர் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஏரியின் பாதுகாப்புக்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மதகுகள் வழியாக விநாடிக்கு ஆயிரத்து 46 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் எந்தப் பாதிப்பும் இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணித்து வருவதால் அதில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

முகலிவாக்கம், மாங்காடு பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் காரணம் இல்லை. பூவிருந்தவல்லி சுற்றுவட்டத்தில் பெய்த மழை நீர் முகலிவாக்கம் வழியாக செல்வதால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்’ என்றார்.

"செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை"

அய்யப்பன்தாங்கல், மாங்காடு பகுதியில் ஏற்படும் மழை வெள்ளப்பாதிப்புகளைத் தடுக்க சிறப்பு திட்டத்தை வகுத்து அதன் மூலம் மழை நீர் வடிவதற்கான பணிகளை மேற்கொள்ள தலைமைச்செயலாளரிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதையும் படிங்க: Rain Update: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.