ETV Bharat / state

கவிழ்ந்து விழுந்த தண்ணீர் லாரி - tamil latest news

சென்னை: கே.கே.நகர் புறநகர் மருத்துவமனை அருகே தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

கவிழ்ந்து விழுந்த தண்ணீர் லாரி
கவிழ்ந்து விழுந்த தண்ணீர் லாரி
author img

By

Published : May 9, 2020, 12:26 AM IST

கரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் வாகனங்களின் போக்குவரத்து சற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை - கே.கே.நகர் புறநகர் மருத்துவமனை அருகே தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்தது. தற்போது ஊரடங்கு காரணம் என்பதாலும்; மேலும் அதிகாலை என்பதாலும் ஓட்டுநர் தண்ணீர் லாரியை மிகவேகமாக ஓட்டி வந்துள்ளார்.

கவிழ்ந்து விழுந்த தண்ணீர் லாரி

மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த லாரி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் இருந்த போது, ஓட்டுநரின் உதவியாளர் பார்த்தசாரதி லாரியை விட்டு, தப்பி ஓட முயன்றுள்ளார்.

பின்னர் பொதுமக்கள் அவரைப் பிடித்து தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்த பார்த்தசாரதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சென்னை - எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவால் நெல்லையில் முதல் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.