நாள்தோறும் சென்னையில் மட்டும் சுமார் 35 லட்சம் வாடிக்கையாளர்களுக்குத் தனியார் தண்ணீர் லாரிகள், மூலம் பல கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரிகளை சிறைப்பிடிப்பது, வழக்குகள் பதிவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதுமுள்ள தண்ணீர் விநியோகம் செய்யும் சுமார் 15 ஆயிரம் லாரிகள், 10 ஆயிரம் டிராக்டர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வாகனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "சென்னை மெட்ரோ வாட்டர் அலுலர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளதால் இங்கு வந்துள்ளோம்;