ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றின் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கழிவுகள் : மின்வாரியத்துக்கு நீதிபதிகள் எச்சரிக்கை - மின்வாரியத்துக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் முழுவதையும் இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்தி, பொதுப் பணித்துறை பொறியாளரிடம் சான்றிதழ் பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொசஸ்தலை ஆறு
கொசஸ்தலை ஆறு
author img

By

Published : Nov 13, 2021, 10:27 AM IST

சென்னை : எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டம் அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி அமல்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழல் அனுமதியை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கொசஸ்தலை ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்துள்ளதாகவும் கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று (நவ.12) விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர் வழிப்பாதையில் உள்ள கட்டட பொருள்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நீர் வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்ற நான்கு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

உரியக் காலத்திற்குள் முடிக்காவிட்டால்

இதனை நிராகரித்த நீதிபதிகள், பணிகளை அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படுமென உறுதியளிக்கும்போது, அதற்கான தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் பெற்றுள்ளதா? இல்லையா? என தெரியாதா என கேள்வி எழுப்பி, உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் மின்வாரிய தலைவர் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்.

டான்ஜெட்கோ
டான்ஜெட்கோ
மேலும், நீர்நிலைகளில் கொட்டப்பட்டிருக்கும் அனைத்து இடிபாடுகள், கான்கிரீட் பொருட்களை விரைந்து அகற்றி, பொதுப் பணித்துறை பொறியாளரிடமிருந்து சான்றிதழை டான்ஜெட்கோ பெற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆற்றுப் படுக்கையில் இருந்து தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டதா? என்பது குறித்து சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) நீர்வளப் பொறியியல் துறையின் உதவியைப பெற்று ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தி விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க : தீர்க்கமாக தீர்ப்பளித்த சஞ்ஜிப் பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.