ETV Bharat / state

சென்னை காவல் துறை அதிரடி: 3ஆவது அலை பரவாமல் இருக்க வார் ரூம்

கரோனா மூன்றாவது அலையை வரும் முன் காக்கும் நோக்கில் துணை ஆணையர் தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலவலகத்தில் வார் ரூம் (கட்டுப்பாட்டு அறை) உருவாக்கப்பட்டுள்ளது.

war room
வார் ரூம்
author img

By

Published : Aug 3, 2021, 7:30 AM IST

சென்னை: கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத மத்தியில் பரவ ஆரம்பிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் பலர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அலை தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஐந்து நாள்களாக அதிகரித்துவருகிறது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி நிலவரப்படி, ஆயிரத்து 735 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே சென்னையில் விதிகளை மீறி மக்கள் கூடும் ஒன்பது இடங்களில் பத்து நாள்கள் கடைகளைத் திறக்க தடைவிதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடிய ஏழு டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் நடவடிக்கையாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வார் ரூம் என்ற கட்டுப்பாட்டு அறையை நேற்று தொடங்கிவைத்துள்ளார்.

வார் ரூம்

துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார்ரூமில் செயல்படத் தொடங்கியுள்ளனர். அதன்படி, சென்னை பெருநகர காவல் மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்று தொற்றுப் பரவலை கண்டுபிடிக்க களமிறங்கியுள்ளனர்.

இதில் பணிபுரியும் காவலர்கள் கணினி செயல்பாடுகள், சைபர் தொடர்பான விவரங்கள் பற்றி தெரிந்தவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியிடமிருந்து நாள்தோறும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் பெறப்படும்.

கரோனா தடுப்பு நடவடிக்கை

அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் அழைப்புகள் (15 நாள்களுக்குள்) தொடர்பான தகவல்களை டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து பெற்று, அதன்மூலம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.

சைபர் கிரைம் வல்லுநர்கள் உதவியுடன் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் எங்கெங்கு சென்றார் என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது கரோனா அதிகம் பரவும் இடங்களை அடையாளம் காணவும், வெளிமாநிலத்திலிருந்து வரும் நபர்கள் மூலம் பரவுகிறதா என்பதைக் கண்டுபிடிக்கவும் உதவியாக அமையும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவங்க இதை பயன்படுத்திக்கோங்க..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.