ETV Bharat / state

விமான நிலையத்தில் சுவர் ஓவிய நிகழ்ச்சி.... - Wall painting program at the airport

சென்னை: திரிசூலத்திலிருந்து மீனம்பாக்கம் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் விமான நிலைய சுற்றுச்சுவர்களில் மாபெரும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப்பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு...

painting
author img

By

Published : Nov 23, 2019, 10:01 PM IST

தமிழ்நாடு தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று விமான நிலையம். நகரத்தின் 7 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியான முக்கிய விமான நிலையமாகும். இரண்டாம் உலகப்போரின்போது இராணுவத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இவ்விமான நிலையம், இன்று தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

சுற்றுச்சுழலைக் கருத்தில் கொண்டு விமான நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்தியது முதல், சுகாதாரமான இலவசக் குடிநீரை வழங்கியது வரை சென்னை விமான நிலையத்திற்குத்தான் முதலிடம்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர், திரிசூலத்திலிருந்து பரங்கிமலை வரை நீண்டது. அங்குள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் கடும் அசுத்தம் நிலவியதால், அதனைத் தடுக்க விமான நிலையம் சார்பில் பல நடவடிக்கைள் எடுக்கப்பட்டது. ஆனாலும் பயனில்லாததால் விமான நிலைய நுழைவுப் பகுதி முழுவதும் உள்ள சுவற்றில் கலாச்சார ஓவியங்களை வரையத் திட்டமிட்டனர்.

அதன்படி, சென்னை விமான நிலைய ஆணையம், இந்தியச் சுற்றுலாக் கழகம், தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் இணைந்து, திரிசூலத்திலிருந்து மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரை உள்ள சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரைய முடிவு செய்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ அமைப்பினர், ஓவியர்கள் கொண்டு ஒரே நாளில் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டனர்.

அதன்படி 1500க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து சுவரில் ஓவியங்கள் வரையத் தொடங்கினர். இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் இந்திய, தமிழ்க் கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் ஓவியங்கள் சுவரில் வரையப்பட்டன.

விமான நிலையத்தில் சுவர் ஓவிய நிகழ்ச்சி

இதில் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த சுவர்கள் முழுவதும் மாணவர் வரைந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால்,சென்னை விமான நிலைய சுற்றுப்பகுதி அழகுபடுவதுடன், தமிழ்நாடு கலாச்சாரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நிம்மதியில்லாத நெடுஞ்சாலை பயணம்.!

Intro:திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் விமான நிலைய சுற்றுச்சுவர்களில் மாபெரும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தனBody:திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் விமான நிலைய சுற்றுச்சுவர்களில் மாபெரும் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தன

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் திரிசூலத்தில் இருந்து பரங்கிமலை வரை சுற்றுச்சுவர் உள்ளது. கடந்த மாதம் சீன அதிபர் சென்னை வந்தப்போது மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை சிமெண்ட் சாலை உள்ள 1 கிலோ மீட்டர் தூரம் இந்திய கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சுற்றுச்சுவர்களில் ஒவியங்கள் வரைப்பட்டன. இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது.

மேலும் திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் மெட்ரோ தூண் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து சென்னை விமான நிலையம் வெளியே சுற்றி சிறுநீர் கழிப்பதை தடுக்க சென்னை விமான நிலைய ஆணையகம் பல நடவடிக்கைகள் எடுத்தது. ஆனாலும் தடுக்க முடியாததால் விமான நிலைய நுழைவு பகுதி முழுவதும் சுவற்றில் கலாச்சாரங்களை ஒவியமாக வரைய திட்டமிட்டனர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையம், இந்திய சுற்றுலா கழகம், தமிழ்நாடு சுற்றுலா கழகமும் இணைந்து திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சுற்று சுவரில் 400 பாகங்களாக பிரித்து ஒவியங்களை வரை முடிவு செய்தது.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ அமைப்பினர், ஒவியர்கள் என 1500க்கும் மேற்பட்டவர்களை கொண்டு ஒரே நாளில் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றுச்சுவரில் ஒவியங்களை வரையும் பணி தொடங்கியது.

இதில் இந்திய, தமிழக கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், இயற்கையான மலை பிரதேசங்களில் மரங்களை அகற்றி கட்டிடங்கள் அமைத்தல், சமூக பிரச்சனைகள், விளையாட்டு போட்டிகள், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் ஒவியங்கள் என 400 பாகங்களாக பிரிக்கப்பட்ட சுவற்றில் வரைப்பட்டன.

இதன் முலம் சென்னை விமான நிலையம் சுற்றி அழகுப்படுத்துவதுடன் தமிழக கலாச்சாரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வரைப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓவியங்கள் வரந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் வாய்ப்பளித்தவர்க்கு நன்றி தெரிவித்தானர்

பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்

இதுபோன்ற ஓவியங்கள் நமது கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளனConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.