ETV Bharat / state

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு - islam peoples election

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, 19.08.2020 அன்று நடைபெறவிருந்த இரண்டு முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Wakf board election
Wakf board election
author img

By

Published : Sep 4, 2020, 1:24 AM IST

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் 09.09.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த, இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள், இஸ்லாமிய முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு தேர்தல் கால அட்டவணை 15.07.2020 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டது. அவ்வறிவிக்கையின்படி முத்தவல்லிகள் பிரிவிற்கான தேர்தல் 19.08.2020 அன்று நடைபெறுவதாக இருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதை எதிர்த்தும், வக்ஃப் வாரியத்தை திருத்தி அமைப்பதற்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கையை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகளில், முத்தவல்லிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு உறுப்பினர்களான சையத் அலி அக்பர் மற்றும் டாக்டர் ஹாஜா கே. மஜீத் ஆகியோரைப் பொறுத்தவரையில் மட்டும், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்ட ஆணைகள் மற்றும் அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேற்காணும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, 19.08.2020 அன்று நடைபெறவிருந்த இரண்டு முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் 28.08.2020 தேதியிட்ட உத்தரவில் 17.08.2020-ல் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட முத்தவல்லி பிரிவிற்கான தேர்தல், உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் ஆணைகளுக்கு உட்பட்டு, 09.09.2020 (புதன்கிழமை) அன்று எண்.1, ஜாபர் சீராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-இல் அமைந்துள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெறும். ஏற்கனவே தபால் மூலம் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் இந்த தேர்தலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தபால் மூலம் விண்ணப்பம் செய்து வாக்கு சீட்டு பெறாதவர்கள் / வாக்கு சீட்டினை பயன்படுத்தி வாக்கு அளிக்காதவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கலாம். இது தொடர்பாக வாக்காளர்கள் தேர்தல் விதிகளுக்குட்பட்டு, உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் வாக்கு சாவடியில் பராமரிக்கப்படும் பதிவேடு மூலம் சரிபார்க்கப்படும். 10.09.2020 (வியாழக்கிழமை) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.