ETV Bharat / state

தீபாவளி சீட்டு பெயரில் ரூ.1,200 கோடி மோசடி.. முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்!

காஞ்சிபுரம் செய்யாறு பகுதியை மையமாக வைத்து செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் தீபாவளி பண்டிகை சீட்டு பெயரில் ரூ.1,200 கோடி மோசடி செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளனர்.

ரூ.1,200 கோடி நிதி மோசடி -  முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு!

author img

By

Published : Jan 6, 2023, 3:07 PM IST

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறை மையமாக வைத்து VRS ஃபண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து சுமார் 1,200 கோடி ரூபாய் மோசடி செய்து, தற்போது தலைமறைவாக இருக்கும் நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை விரைவாக மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்டவர்கள், “நான்கு ஐந்து ஆண்டுகளாக VRS ஃபண்டு நிறுவனம் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, கொடுங்கலூர், ஆரணி ஆகிய ஊர்களில் செயல்பட்டு வந்தது. அதில் தீபாவளி ஃபண்டு, பொங்கல் ஃபண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் ஏஜெண்டுகள் மூலமாக பணம் செலுத்தினார்கள்.

கடந்த ஆண்டு வரை சரியாக பொருட்களை தந்த நிர்வாகம், இந்த ஆண்டு தீபாவளிக்கு பொருட்களை தரவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் நிர்வாகத்தில் இருந்து, வேலைக்கு ஆட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் பொருட்களை தருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே தீபாவளி கழித்து பொருட்கள் தரப்படும் என அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஏஜெண்டுகள் 2 மாதம் பொறுத்தும், நிர்வாகத்தில் இருந்து சரியான பதில் வரவில்லை. அதேநேரம் ஒரு மாதத்தில் பணத்தைத் தருகிறேன் என்று சொன்னவர்கள் இப்போது தலைமறைவாக இருக்கிறார்கள். எங்களுடைய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையின் செயலால் தமிழ்நாட்டில் பாஜக வளராது - ஜவாஹிருல்லா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.