ETV Bharat / state

திமுகவிற்கு வாக்களியுங்கள் - 4 தொகுதி வாக்காளர்களுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகும் திருபரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி வாக்காளர்களும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என திக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கி. வீரமணி
author img

By

Published : Apr 15, 2019, 8:06 AM IST

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எஞ்சியுள்ள மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்தே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் திமுக வழக்கும்கூட போட்டது.

இதற்கிடையில், சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் காலமானதால் அத்தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றமே நிகழும் வாய்ப்பும் இருப்பதால், இவைகளின் முடிவுகள் மிக முக்கிய அரசியல் திருப்பமாக அமையும். குறிப்பாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், மற்றும் ஒட்டப்பிடாரம்(தனி) ஆகிய நான்கு தொகுதிகளும் திருப்புமுனையாக இருக்கும் என்பதால், இந்த நான்கு தொகுதி வாக்காளர்களும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு திராவிட கட்சி தலைவர் வீரமணி வேண்டுகோள். இது தொடர்பாக அவர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது :

தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன்  தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எஞ்சியுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்தே நடைபெற வேண்டும் என்று தி.மு.க. உட்பட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. திமுக வழக்கும்கூட போட்டது.

இதற்கிடையில் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானதால் அத்தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வருகிற மே 19ஆம் தேதியில் நடைபெறும் என்று நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தலால் ஆட்சி மாற்றமே நிகழும் வாய்ப்பும் இருப்பதால், இவைகளின் முடிவுகள் மிக முக்கிய அரசியல் திருப்பமாக அமையும்.
திமுக சார்பில் - திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, சூலூருக்குப் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரம் (தனித் தொகுதி) எம்.சி. சண்முகய்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.அவர்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டில் மோடியை அதிமுகவின் “டாடியாக”ப் பேசும் கொத்தடிமை அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட அத்தொகுதி வாக்காளர்ப் பெரு மக்கள் உதயசூரியனுக்கே வாக்களித்து - தமிழக ஆட்சி மாற்றம் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏற்பட வழி வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.